நார்வே செஸ் போட்டி: கார்ல்செனிடம் வீழ்ந்த எரிகைசி

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ஸ்டாவஞ்சர்,

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியன் குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), அர்ஜூன் எரிகைசி (இந்தியா) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

இதில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் குகேஷ், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் பாபியானோ கருனாவை (அமெரிக்கா) சந்தித்தார். 4 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து வெற்றி, தோல்வியை முடிவு செய்ய நடந்த டைபிரேக்கரில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 51-வது நகர்த்தலில் பாபியானோ கருனாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

குகேஷ் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 48-வது காய் நகர்த்தலில் கார்ல்செனிடம் வீழ்ந்தார்.

4-வது சுற்று முடிவில் கார்ல்சென் 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாபியானோ கருனா 7 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) 5.5 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். குகேஷ், அர்ஜூன் எரிகைசி (தலா 4.5 புள்ளி) 4-வது இடத்தை இணைந்து வகிக்கின்றனர். சீனாவின் வெய் யி (4 புள்ளி) கடைசி இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com