

டோக்கியோ,
20-வது ஆசிய விளையாட்டு போட்டி சமீபத்தில் (செப்.19 முதல் அக்.4-ந் தேதி வரை) ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயாவில் நடைபெற்றது. இந்த நிலையில் அதே இடத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடக்கிறது.
பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் மொத்தம் 275 பேர் கொண்ட இந்திய அணியினர் கலந்து கொள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதில் 111 வீரர், 55 வீராங்கனைகள் அடங்குவார்கள். மற்ற வர்கள் அணியின் அதிகாரிகள், பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள் ஆவர். இந்தியா 10 விளையாட்டுகளில் களம் காணுகிறது. அதிகபட்சமாக தடகள் அணியில் வீரர்கள் (46) வீராங்கனைகள் (16) உதவி பணியாளர்கள் (36) என 98 பேர் இடம் பெற்றுள்ளனர்.
உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற பார்வை குறைபாடு கொண்ட ஓட்டப்பந்தய வீராங்கனை சிம்ரன் தடகள அணியில் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே அவருக்கு வழிகாட்டியாக செயல்பட்ட உமர் சைபி ஊக்கமருந்து சர்ச்சை யில் சிக்கியதால் புதிய வழிகாட்டியாக ஷிவம் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக்கில் வெள் ளிப்பதக்கம் வென்ற பவினா பட்டேல் (டேபிள் டென்னிஸ்), பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத், வெள்ளிப்பதக்கம் பெற்ற சுஹாஸ் யதிராஜ் (இருவரும் பேட்மிண்டன்). பாரா ஒலிம்பிக் சாம்பியன் அவனி லெகரா (துப்பாக்கி சுடுதல்), கடந்த ஆசிய விளையாட்டில் இரண்டு தங்கப்பதக்கம் கைப்பற்றிய இருகைகளும் இல் லாத வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, உலக வில்வித்தையில் சாம்பியன் பட்டம் வென்ற 18 வயது பயால் நாக். பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக பேட்மிண்டன் வீராங்கனைகள் மனிஷா, நித்யா, துளசிமதி உள்பட முன்னனி வீரர்-வீராங்கனைகள் அணியில் அங்கம் வகிக்கின்றனர்.