

நகோயா,
5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் நகோயா நகரில் கடந்த 18-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. வழக்கம் போல் ஆதிக்கம் செலுத் திய சீனா பதக்கப்பட்டியலில் முதலிடத்தை ஆக்கிரமித்தது. இதே போல் முதல் நாளில் இருந்தே பதக்கங்களை அள்ளிய இந்தியா 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என 114 பதக்கங்களுடன் 4-வது இடத்தை பிடித்து புதிய சரித்திரம் படைத்தது.
இந்த போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளில் வீல்சேர் வாள் வீச்சு (3), வலுதூக்குதல் (1), போசியா (3), வில்வித்தை (2) என 4 விளை யாட்டுகளில் 9 தங்கப்பதக்கங்களான பந்தயங்கள் நடக்கின்றன. தொடர்ந்து இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு நிறைவு விழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. கண்கவர் கலை நிகழ்ச்சி, பாரம்பரிய நடனங்கள், லேஷர் ஷோ, வாணவேடிக்கை இடம் பெறுகின்றன. அத்துடன் 45 நாட்டு வீரர், வீராங் கனைகள் அணிவகுத்து செல்கிறார்கள். இந்திய அணிக்கு இரட்டை தங்கம் வென்று கவனத்தை ஈர்த்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மோனா அகர் வால், தடகள வீரர் நிஷாத்குமார் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் நிறைவாக போட்டிக்குரிய கொடி இறக்கப்பட்டு, 2030-ம் ஆண்டு பாரா ஆசிய விளையாட்டை நடத்தும் கத்தாரிடம் ஒப்படைக்கப்படும்.