

டோக்கியோ,
மாற்றுத் திறனாளிகளுக்கான 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஜப் பானின் நகோயாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், சீனா. தென்கொரியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 5-வது நாளான நேற்றும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க வேட் டையில் படுஜோராக செயல்பட்டு கவனத்தை ஈர்த்தனர். ஒரே நாளில் இந் தியா 7 தங்கம், 4 வெள்ளி, 15 வெண்கலம் என 26 பதக்கங்களை அறு வடை செய்தது. அத்துடன் தென்கொரியாவை பின்னுக்கு தள்ளி பதக்கப்பட் டியலில் 4-வது இடத்துக்கு ஏற்றம் கண்டது.
வில்வித்தையில் பெண்களுக்கான காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் தோமன் குமார்-ஷீத்தல் தேவி ஆகியோர் அடங்கிய இந் திய அணி 151-148 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசிய ஜோடியை தோற் கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஷீத்தல் தேவி 142-139 என்ற புள்ளி கணக்கில் சிங்கப்பூரின் அலிம் நூர் சியாஹிடாவை வீழ்த்தி தங் கப்பதக்கத்தை தனதாக்கினார். ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த இரு கைகளும் இல்லாத 19 வயது ஷீத்தல் தேவி கால்கள் உதவியுடன் அம்பை இலக்கை நோக்கி துல்லியமாக எய்து தங்க மங்கையாக ஜொலித்துள்ளார். நடப்பு தொடரில் அவர் 3 பதக்கங்களை வென்றுள்ளார். உலக சாம்பியனான ஷீத்தல் தேவி முந்தைய நாளில் பெண்கள் இரட்டையர் பிரிவில் (பாயக் நாக்குடன் இணைந்து) வெள்ளிப்பதக்கம் வென் றிருந்தார். இதன் மூலம் கடந்த (2022) பாரா ஆசிய விளையாட்டு போட்டியை போல இந்த முறையும் 3 பதக்கம் (2 தங்கம், ஒரு வெள்ளி) வென்று வில்வித்தை ராணியாக உருெவடுத்துள்ளார்.
ரிகர்வ் தனிநபர் பிரிவின் (டபிள்யூ !) இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சுவாதி சவுத்ரி, சீனாவின் சென் மெங்கா னுடன் மோதினார். தொடக்கத்தில் 4-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து சறுக்கிய சுவாதி சவுத்ரி 4-6 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
தடகளத்தில் இந்தியாவின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. பெண்களுக்கான வட்டு எறிதலில் (எப்54 பிரிவு) இந்திய வீராங்கனை சுவர்ணா ராஜ் 15.66 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார். 44 வயதான சுவர்ணராஜ் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
400 மீட்டர் ஓட்டத்தில் (டி47 பிரிவு) இந்திய வீராங்கனை அஞ்சனாபென் பும்பாடியா 59.97 வினாடியில் பந்தய துரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மற்றொரு இந்திய வீராங்கனை ஜெயந்தி பெஹெரா (1 நிமிடம் 65 வினாடி) வெள்ளிப்பதக்கம் வென்றார். அஞ்சனா பென் குஜராத்தை சேர்ந்தவர். 400 மீட்டர் ஓட்டத்தில் டி12 பிரிவில் (பார்வை குறைபாடு உடையவர்களுக்கான) இந்திய வீராங்கனை தேஜல்பென் தாமோர் (57.60 வினாடி) வெள்ளிப்ப தக்கத்தை கைப்பற்றினார். அவர் வென்ற 2-வது பதக்கம் இதுவாகும்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் (டி63 பிரிவு) இந்தியா 3 பதக்கத்தையும் கபளீகரம் செய்தது. சைலேஷ் குமார் (1.89 மீட்டர்) போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கமும், வருண் பாதி (1.84 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், ராகுல் (1.81 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் சோலைராஜ் தர்மராஜ் (டி44/62/64 பிரிவு) 7.15 மீட்டர் தூரம் தாண்டி (807 புள்ளி) புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தக்கவைத்தார். ராணுவ பணியின் போது இடது காலில் பாதிப்பு ஏற்பட்டு முட் டிக்கு கீழ் இழந்த தமிழகத்தை சேர்ந்த 32 வயதான சோலைராஜ், செயற்கைகாலுடன் களம் கண்டு தனது திற மையை வெளிக்காட்டினார். கடந்த பாரா ஆசிய விளையாட்டிலும் அவர் தங்கம் வென்றிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
பேட்மிண்டனில் கலப்பு இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் துளசிமதி- நிதேஷ் குமார் இணை (எஸ் எல்3-எஸ்யூ 5) 21-19, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் லி மிங்பின்-சியாவோ ஜூக்சியான் ஜோடியை பதம் பார்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தமிழகத்தை சேர்ந்த துளசிமதி பெண்கள் இரட்டையரிலும் இறுதிப் போட்டிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் நவீன் (எஸ்எல்4) 21-13, 21-15 என்ற நேர்செட்டில் சக நாட்டவரான அபிஜீத் சகுஜாவை தோற்கடித்து இறுதிப்போட்டியை எட்டினார். தோல்வியை தழு விய அபிஜித் சகுஜா வெண்கலப்பதக்கம் பெற்றார். பிரமோத் பகத், நிதேஷ் குமார் ஆகியோரும் தங்களது ஒற்றையர் பிரிவுகளில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் (எஸ்எல்3) அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சஞ்சனா குமாரி 7-21-9-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் ஷினோ கவாயிடம் தோற்று வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். கலப்பு இரட்டையர் பிரி வில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ்- பிரமோத் பகத் மற்றும் கிருஷ்ணா நாகர்-நித்ய ஸ்ரீ இணைகளும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுஹாஸ்சும் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.
நீச்சலில் கபில் குமார் (வெள்ளி), ஸ்வாதிக் பட்டீல், தேஜாஸ் நந்தகுமார். ரவி (மூவரும் வெண்கலம்), டேபிள் டென் னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் பவினா பட்டேல்-சுபம் வத்வா (வெண்கலம்), 400 மீட்டர் ஓட்டத்தில் ரவானி (வெண் கலம்) ஆகியோரும் பதக்க மேடை ஏறினர்.