பாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஓரே போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்,வெண்கலம்

இந்தியாவின் சந்தீப் தங்கப் பதக்கம் வென்றதுடன் உலகச் சாதனையையும் படைத்தார்.


பாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஓரே போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்,வெண்கலம்
Published on: 

டோக்கியோ,

மாற்றுத் திறனாளிகளுக்கான 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஜப் பானின் நகோயாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆடவர் 400 மீட்டர் டி64 பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி சுற்றில் 52.28 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து இந்தியாவின் சந்தீப் தங்கப் பதக்கம் வென்றதுடன் உலகச் சாதனையையும் படைத்தார்.

இதே போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் அஜய் குமார் 53.61 விநாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்த வெற்றிகளுடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100-ஐக் கடந்தது.

இந்திய வீரர்கள் பாரா தடகளத்தில் வெளிப்படுத்திய இந்தச் சிறப்பான ஆட்டம் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com