

டோக்கியோ,
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரர் மனீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 பிரிவின் இறுதிப்போட்டியில் 233.7 புள்ளிகள் பெற்று அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இதன் மூலம் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக் போட்டிக்கான தகுதி இடத்தையும் உறுதி செய்துள்ளார்.தென் கொரியாவின் ஜோ ஜியோங்டு 241.3 புள்ளிகளுடன் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் சாதனையை முறியடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
னாவின் யாங் சாவ் 213.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். இதே போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் ருத்ரான்ஷ் கந்தேல்வால் ஏழாவது இடத்தைப் பிடித்தார்.
ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் பகுதியைச் சேர்ந்த மனீஷ் நர்வால், ஏற்கெனவே 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கமும், 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் இதே பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றவர்.