பாரா ஆசிய விளையாட்டு: மோனா அகர்வால் மீண்டும் தங்கம் வென்றார்

இந்தப் போட்டியில் தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினார்.
பாரா ஆசிய  விளையாட்டு: மோனா அகர்வால் மீண்டும் தங்கம் வென்றார்
Published on: 

டோக்கியோ,

இந்தியாவின் நட்சத்திர பாரா துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மோனா அகர்வால், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மீண்டும் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இன்று நடைபெற்ற மகளிர் 50 மீட்டர் ரைஃபிள் த்ரீ பொசிஷன்ஸ் SH1 பிரிவில், மோனா அகர்வால் 357.5 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலகச் சாதனையை முறியடித்ததுடன், இந்தப் போட்டியில் தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினார்.

சீனாவின் ஜாங் குபிங் 353.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், தென் கொரியாவின் கிம் மியோங் 344.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

முன்னதாக, மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஸ்டாண்டிங் SH1 பிரிவிலும் மோனா தங்கம் வென்றிருந்தார். இதனால், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026-ல் இரண்டு தங்கப் பதக்கங்களையும் சாதனைகளையும் படைத்துள்ள மோனா அகர்வாலுக்கு இந்தியா முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com