பாரா ஆசிய விளையாட்டு: பிரமோத், பவினா பட்டேல் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள்

பிரமோத் பகத், பவினா பட்டேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாரா ஆசிய விளையாட்டு: பிரமோத், பவினா பட்டேல் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள்
Published on: 

புதுடெல்லி,

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் நகோயா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. அடுத்ததாக அதே இடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான தொடக்க விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்வதற்கு பாராஒலிம்பிக் சாம்பியன்களான பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பட்டேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை இந்திய பாராஒலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஜாரியா தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com