3000 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையை முறியடித்தார் பாருல் சவுத்ரி..!!

6 வருட தேசிய சாதனையை பாருல் சவுத்ரி இன்று முறியடித்தார்.
Image Courtesy : Media_SAI
Image Courtesy : Media_SAI
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்,

இந்திய தடகள வீராங்கனை பாருல் சவுத்ரி 3000 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையை இன்று முறியடித்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் சவுண்ட் ரன்னிங் சன்செட் நடைபெற்ற போட்டியில் அவர் பெண்களுக்கான 3000மீ ஓட்டத்தில் 8 :57:91 நிமிடத்தில் இல் தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சூரியா லோகநாதனின் 6 வருட தேசிய சாதனையை 7 வினாடிகளில் பாருல் சவுத்ரி முறியடித்தார்.

சூரியா லோகநாதன் 2016 இல் புது தில்லியில் 3000 மீட்டர் ஓட்டத்தில் 9:04.5 நிமிடத்தில் இலக்கை கடந்ததை இதுவரை தேசிய சாதனையாக இருந்தது. இந்த போட்டியில் பாருல் சவுத்ரி தேசிய சாதனையை முறியடித்தது மட்டுமல்லாமல் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.

2022 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓரிகானில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் பாருல் சவுத்ரி போட்டியிடுவார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com