பார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி முதலிடம்

2-வது சுற்றான சீன கிராண்ட்பிரி போட்டி ஷாங்காய் நகரில் உள்ள சர்வதேச ஓடுதளத்தில் நேற்று நடந்தது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ஷாங்காய்,

'பார்முலா1' கார்பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 2-வது சுற்றான சீன கிராண்ட்பிரி போட்டி ஷாங்காய் நகரில் உள்ள சர்வதேச ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 305.066 கிலோ மீட்டர் ஆகும். இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் இலக்கை நோக்கி காரில் சீறிப் பாய்ந்தனர். தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி கார் (மெக்லரன் அணி) முதல் வரிசையில் இருந்து புறப்பட்டது.

முடிவில் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி 1 மணி 30 நிமிடம் 55.026 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. அவரைவிட வெறும் 9.748 வினாடிகள் மட்டும் பின்தங்கிய இங்கிலாந்தின் லான்டோ நோரிஸ் (மெக்லரன் அணி) 2-வது இடத்தை பிடித்து அதற்குரிய 18 புள்ளிகளை பெற்றார். இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் ரஸ்செல் (மெர்சிடஸ் அணி ) 3-வதாக வந்தார். நடப்பு சாம்பியன் நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட் புல் அணி) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

2-வது சுற்று முடிவில் லான்டோ நோரிஸ் 44 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வெர்ஸ்டப்பென் 36 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜார்ஜ் ரஸ்செல் 35 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்கர் பியாஸ்ட்ரி 34 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். இதன் 3-வது சுற்று போட்டி அடுத்த மாதம் 6-ந் தேதி ஜப்பானின் சுசூகா நகரில் நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com