ஆசிய விளையாட்டில் சாதித்த வீரர், வீராங்கனைகளுடன் இன்று கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 85 பதக்கங்களை குவித்து 4-வது இடத்தை தக்க வைத்தது.
ஆசிய விளையாட்டில் சாதித்த வீரர், வீராங்கனைகளுடன் இன்று கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி
Published on: 

புதுடெல்லி,

சமீபத்தில் ஜப்பானின் நகோயா நகரில் நடந்த 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 495 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு 36 விளையாட்டுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

பிரதமர் மோடி

இறுதியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை குவித்து 4-வது இடத்தை தக்க வைத்தது.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டில் பங்கேற்ற மற்றும் பதக்கம் வென்று சாதித்த வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

மாலை 4.30 மணிக்கு

டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு இதற்கான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளன நிர்வாகிகள், மத்திய விளையாட்டு அமைச்சக அதிகாரிகளும் கலந்து கொள்கிறாார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com