

தலைமைப் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் பயற்சியாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடவடிக்கை என தகவல் வெளியாகி உள்ளது.
ரொனால்டோ இல்லாமல் பங்கேற்ற 3 போட்டிகளில் போர்ச்சுகல் வென்றுள்ளது. இவருக்குப் பதில் வாய்ப்பு பெற்ற கொன்சாலோ ராமோஸ், 3 கோல் அடித்துள்ளார். இதனிடையே நார்வேக்கு எதிரான போட்டியில், ரொனால்டோவுக்கு வாய்ப்பு தராமல், மைதானத்தின் ஒரு பகுதியில் பயிற்சி செய்யுமாறு, பயிற்சியாளர் ஜீசஸ் கூறியுள்ளார்.
ஆனால் இது தவறு என, ஜீசஸ் ஒப்புக் கொள்ள வேண்டும் என ரொனால்டோ கேட்க, பயிற்சியாளர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ரொனால்டோ, போர்ச்சுகல் அணி முகாமை விட்டு வெளியேறினார். விரைவில் ஓய்வு அறிவிப்பார் என நம்பப்பட்டது.
இந்த விவகாரத்தில் தலையிட்ட போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு, ரொனால்டோவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. விசாரணை முடிவில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில்,‘‘ அணியில் இருந்து வெளியேறியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். எனக்கு தண்டனை வழங்க வேண்டும். தடைக்குப் பின் ஒன்று அல்லது இரண்டு பிரியாவிடை போட்டிகள் இருக்கும் என நம்புகிறேன்,’’ என்றார்.