புரோ கபடி: எலிமினேட்டர் சுற்றில் யுபி யோத்தா- புனேரி பால்டன் அணிகள் நாளை மோதல்

மற்றொரு சுற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் மோதுகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூர்,

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. தமிழ் தலைவாஸ் 47 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தைப் பிடித்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், நாளை நடைபெறும் எலிமினேட்டர் 1 சுற்றில் உபி யோத்தா- புனேரி பால்டன் அணிகள் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. எலிமினேட்டர் 2 சுற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், பெங்களூரு புல்ஸ் அணியும் இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணிகள் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி அணியுடன் மோதவுள்ளன.

இறுதிப்போட்டியானது வரும் 25-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com