புரோ கபடி லீக்; அரியானா ஸ்டீலர்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.
Image Courtesy: @BengalWarriors / @HaryanaSteelers
Image Courtesy: @BengalWarriors / @HaryanaSteelers
Published on

பாட்னா,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு பாட்னாவில் தொடங்கும் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com