புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

இரு அணிகளும் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடின
புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி
Published on

பெங்களூரு,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடின. இறுதி கட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி 32 - 30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com