புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்த பெங்கால்..!

பெங்கால் அணியில் கேப்டன் மனிந்தர் சிங் 15 புள்ளியும், நிதின் குமார் 14 புள்ளியும் எடுத்து அசத்தினர்.
Image Courtesy: @ProKabaddi
Image Courtesy: @ProKabaddi
Published on

பெங்களூரு,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்கால் வாரியர்ஸ் 60-42 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்சை வீழ்த்தியது.

4-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் அணி 3-வது வெற்றியை தனதாக்கியது. 3-வது ஆட்டத்தில் ஆடிய பாட்னா அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com