புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி

இன்று நடைபெற்ற போட்டியில் உ.பி.யோத்தாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
image courtesy: ProKabaddi twitter
image courtesy: ProKabaddi twitter
Published on

ஜெய்ப்பூர்,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இதில் அடுத்தகட்ட லீக் சுற்று ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 36-34 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் உ.பி.யோத்தாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 42-37 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com