புரோ கபடி லீக்; அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி

இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
Image Courtesy: @ProKabaddi
Image Courtesy: @ProKabaddi
Published on

ஐதராபாத்,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியரஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 35-32 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீத்தி தபாங் டெல்லி வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com