புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
image courtesy: ProKabaddi twitter
image courtesy: ProKabaddi twitter
Published on

சண்டிகர்,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் இன்று அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தௌ தேவி லால் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 74-37 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தபாங் டெல்லி அணி 46-38 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com