புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி

இன்று நடைபெற்ற போட்டியில் உ.பி.யோத்தாஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின.
image courtesy: ProKabaddi twitter
image courtesy: ProKabaddi twitter
Published on

பாட்னா,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 32 - 32 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் உ.பி.யோத்தாஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தபாங் டெல்லி அணி 36-27 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com