புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தேவங்க் தலால் நியமனம்

12-வது புரோ கபடி லீக் போட்டிக்கான பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர டைடர் தேவங்க் தலால் நியமிக்கப்பட்டுள்ளார்.
புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தேவங்க் தலால் நியமனம்
Published on

மும்பை,

நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, தமிழ் தலைவாஸ் உள்பட 12 அணிகள் பங்கேற்கும் 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்த நிலையில் , 12-வது புரோ கபடி லீக் போட்டிக்கான பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர டைடர் தேவங்க் தலால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணியின் தற்காப்பு யுக்தியை கையாளுவதற்குரிய கேப்டனாக மூத்த தடுப்பாட்டக்காரர் நிதேஷ் குமார் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போட்டியில் ரைடு மூலம் 301 புள்ளிகள் குவித்த தேவங்க் தலால் ரூ.2.20 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com