புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி

இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
Image Courtesy : @ProKabaddi
Image Courtesy : @ProKabaddi
Published on

சென்னை,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 38-30 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com