புரோ கபடி லீக்; பெங்கால் அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி

நொய்டாவில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
புரோ கபடி லீக்; பெங்கால் அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி
Published on

நொய்டா,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் நொய்டாவில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 51 - 42 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com