புரோ கபடி லீக்; அரியானா ஸ்டீலர்ஸ் - யு மும்பா இன்று மோதல்

அரியானாவின் தௌ தேவி லால் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - யு மும்பா அணிகள் மோத உள்ளன
புரோ கபடி லீக்; அரியானா ஸ்டீலர்ஸ் - யு மும்பா இன்று மோதல்
Published on

சண்டிகர் ,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இதில் இன்று இரவு 8 மணிக்கு அரியானாவின் தௌ தேவி லால் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - யு மும்பா அணிகள் மோத உள்ளன .தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com