புரோ கபடி லீக்; குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி

இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் விளையாடி வருகின்றன.
Image Courtesy: @ProKabaddi
Image Courtesy: @ProKabaddi
Published on

சண்டிகர்,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தௌ தேவி லால் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

இதில் 45-36 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் விளையாடி வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com