புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி

இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - யு மும்பா அணிகள் ஆடி வருகின்றன.
Image Courtesy: @ProKabaddi
Image Courtesy: @ProKabaddi
Published on

கொல்கத்தா,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் 67-30 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்று இரவு 9 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - யு மும்பா அணிகள் ஆடி வருகின்றன

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com