புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் வெற்றி

ரோகித், சச்சின் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
Image Tweeted By ProKabaddi 
Image Tweeted By ProKabaddi 
Published on

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு.பி.யோத்தா-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யு.பி.யோத்தா அணி 40-34 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் யு மும்பா- புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த போட்டியில் யு மும்பா அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புனே அணி 1 புள்ளி வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இன்றைய நாளின் 3-வது போட்டியில் பாட்னா பைரேட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பாட்னா அணி 37-30 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பாட்னா வீரர்கள் ரோகித் (9 புள்ளிகள்) மற்றும் சச்சின் (8 புள்ளிகள்)  ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com