புரோ கபடி லீக் ; புனேரி பால்டன் - உ.பி.யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோத உள்ளன.
Image Courtesy: @ProKabaddi
Image Courtesy: @ProKabaddi
Published on

சண்டிகர்,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரின் லீக் சுற்றின் கடைசி நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தௌ தேவி லால் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புனேரி பால்டன் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோத உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com