புரோ கபடி லீக் போட்டி அட்டவணையில் மாற்றம்


புரோ கபடி லீக் போட்டி அட்டவணையில் மாற்றம்
x

லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

மும்பை,

நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, தமிழ் தலைவாஸ் உள்பட 12 அணிகள் பங்கேற்கும் 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.

இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக்கின் 3-வது மற்றும் 4-வது கட்ட லீக் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3-வது கட்ட சுற்று (சென்னை) ஆட்டம் அக்டோபர் 12-ந் தேதிக்கு பதிலாக 2 நாள் முன்னதாக 10-ந் தேதி முடிவடைகிறது. இதேபோல் 4-வது சுற்று (டெல்லி) ஆட்டம் அக்டோபர் 13-ந் தேதிக்கு பதிலாக 2 நாள் முன்கூட்டியே 11-ந் தேதி தொடங்குகிறது.

இதனால் அக்டோபர் 11-ந் தேதி (பெங்களூரு- ஜெய்ப்பூர், தமிழ் தலைவாஸ்- புனே), 12-ந் தேதி (தபாங் டெல்லி-புனே, பெங்கால்-பெங்களூரு) சென்னையில் நடக்க இருந்த ஆட்டங்கள் டெல்லிக்கு மாறுகின்றன.

1 More update

Next Story