புரோ கபடி லீக் தொடர்; யு மும்பா - புனேரி பால்டன் ஆட்டம் டிரா

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @ProKabaddi
Image Courtesy: @ProKabaddi
Published on

ஐதராபாத்,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியரஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ்,தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பா - புனேரி பால்டன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தன. இறுதியில் இந்த ஆட்டம் 32-32 என டிராவில் முடிந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com