புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அபார வெற்றி

இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - பெங்களூரு புல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
Image Courtesy: @ProKabaddi
Image Courtesy: @ProKabaddi
Published on

சண்டிகர்,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு அரியானாவில் தௌ தேவி லால் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 74-37 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - பெங்களூரு புல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com