புரோ கபடி லீக் ; யு மும்பா அணியை வீழ்த்தி உ.பி. யோத்தாஸ் வெற்றி

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
image courtesy; twitter/ @ProKabaddi
image courtesy; twitter/ @ProKabaddi
Published on

புதுடெல்லி,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் பர்தீப் நர்வால் தலைமையிலான உ.பி.யோத்தாஸ் அணியும், மஹேந்தர் தலைமையிலான யு மும்பா அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தாஸ் 39 - 23 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com