புரோ கைப்பந்து லீக்: சென்னை அணி முதல் வெற்றி

புரோ கைப்பந்து லீக் போட்டியில், சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
புரோ கைப்பந்து லீக்: சென்னை அணி முதல் வெற்றி
Published on

கொச்சி,

முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நேற்று இரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்- ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி 15-12, 15-12, 15-11, 15-10, 13-15 என்ற செட் கணக்கில் ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்து 2 புள்ளிகள் பெற்றது. சென்னை அணி வீரர் நவீன் ராஜா ஜேக்கப் ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் ஆட்டத்தில் சென்னை அணி, கோழிக்கோடு ஹீரோஸ் அணியிடம் தோல்வி கண்டு இருந்தது. முதல் ஆட்டத்தில் ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணியை சாய்த்து இருந்த ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

இன்று நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ்-ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com