

ராஞ்சி,
பெடரேஷன் கோப்பைக்கான 29-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார் கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குரிந்தர்வீர்சிங் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டியில் 100 மீட்டர் இலக்கை வெறும் 10.09 வினாடிகளில் கடந்து, புதிய தேசிய சாதனையை குரிந்தர்வீர் சிங் படைத்துள்ளார். அத்துடன், 10.10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் ஓடி முடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில், குரிந்தர்வீர் சிங்-க்கு பஞ்சாப் முதல்-மந்திரி பகத்வந்த் மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ராஞ்சியில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற நமது நம்பிக்கைக்குரிய தடகள வீரர் குரிந்தர்வீர் சிங்குக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
குரிந்தர்வீர் சிங் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். குரிந்தர்வீரின் இந்த வரலாற்றுச் சாதனையால் பஞ்சாப் மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்கின்றனர்.
மனமார்ந்த வாழ்த்துகளும், எதிர்காலத்திற்கான நல்வாழ்த்துக்களும். என தெரிவித்துள்ளார்.