

புதுடெல்லி,
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள உலக பேட்மிண்டன் டூர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
சமீபத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் உலக மகளிர் பேட்மிண்டன் தரவரிசையில் 6-வது இடத்திற்கு முன்னேறினார். இந்நிலையில், உலக டூர் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
உலகின் சிறந்த பேட்மிண்டன் வீரர்கள் பங்கேற்கும் இந்த இறுதிப் போட்டி, டிசம்பர் 9 முதல் 13-ம் தேதி வரை சீனாவில் நடைபெற உள்ளது. இதில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் தலா 8 வீரர்கள் (அ) ஜோடிகள் பங்கேற்பார்கள்.
இந்த தொடரில் சிந்து பங்கேற்பது 6-வது முறையாகும். கடந்த 2021-ம் ஆண்டுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்த போட்டியில் விளையாட உள்ளார்.