ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியாவில் நடைபெற்று வருகிறது
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து
Published on

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பி.வி.சிந்து வெற்றி

இந்நிலையில், ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில் ஜப்பானின் அகனி யமாகுசியை இந்தியாவின் பி.வி.சிந்து எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் அகனி யமாகுசியை 21-14, 21-17 என்ற செட்களில் வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com