டோக்கியோ பாராஒலிம்பிக் வில்வித்தையில் ராகேஷ் குமார் காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ பாராஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ராகேஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோ பாராஒலிம்பிக் வில்வித்தையில் ராகேஷ் குமார் காலிறுதிக்கு தகுதி
Published on

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் தனிநபர் வில்வித்தை போட்டி இன்று நடந்தது.

இந்த போட்டியில், இந்திய வீரர் ராகேஷ் குமார், சுலொவேகியா நாட்டின் மரியான் மரிசாக்கை 140-137 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெறும் அடுத்த சுற்றில் அவர் விளையாடுகிறார்.

இதற்கு முன் நடந்த தகுதி நீக்க சுற்றில் ஹாங்காங்கின் காய் கா சூவென் என்பவரை 144-131 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தின சுற்றுக்கு முன்னேறினார்.

போட்டி நிறைவடைய ஒரு சில நிமிடங்கள் இருந்தபோது, ராகேஷ் அதிரடியாக இலக்கை நோக்கி அம்புகளை அடித்து வெற்றி பெற்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com