டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகினார், கரோலினா மரின்

பேட்மிண்டன் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் காயம் காரணமாக ஜூலை 23-ந்தேதி டோக்கியோவில் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகினார், கரோலினா மரின்
Published on

புதுடெல்லி,

பேட்மிண்டனில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சமீபத்தில் பயிற்சியின் போது இடது கால்முட்டியில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் முட்டியின் தசைநாரில் கிழிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் சில தினங்களில் ஆபரேஷன் செய்ய இருக்கிறார். இதையடுத்து ஜூலை 23-ந்தேதி டோக்கியோவில் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

3 முறை உலக சாம்பியனான 27 வயதான கரோலினா மரினுக்கே இந்த முறையும் ஒலிம்பிக்கில் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு தென்பட்டது. அவரது விலகல் இந்தியாவின் பி.வி.சிந்து போன்ற வீராங்கனைகளுக்கு நம்பிக்கை அளிக்கும். 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் சிந்து, இதே கரோலினா மரினிடம் தான் இறுதிஆட்டத்தில் தோற்று இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com