உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்றார் இந்திய வீராங்னை சரிதா மோர்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்னை சரிதா மோர் வெண்கலபதக்கம் வென்றார்.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்றார் இந்திய வீராங்னை சரிதா மோர்
Published on

ஒஸ்லோ,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 59 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்னை சரிதா மோர் 8-2 என்ற புள்ளி கணக்கில் உலக சாம்பியனான கனடாவின் லின்டா மோரிஸ்சுக்கு அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து அவர் கால்இறுதியில் ஜெர்மனியின் சான்ட்ரா பருஸ்ஜிவ்ஸ்கியை வீழ்த்தினாலும் அரைஇறுதியில் 0-3 என்ற கணக்கில் பில்யானா ஸிவ்கோவாவிடம் (பல்கேரியா) போராடி வீழ்ந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 59 கிலோ பிரிவில் ஸ்வீடனின் ஜோஹன்னா லிண்ட்போர்க்கை 8-2 என்ற கணக்கில் வென்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆறாவது இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை சரிதா மோர் பெற்றார்.

இதே போல் பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனையும், ஆசிய விளையாட்டு சாம்பியனுமான அன்ஷூ மாலிக், முன்னாள் உலக சாம்பியனான அமெரிக்காவின் ஹெலின் மரோலிசுடன் நேற்று மோதினார். இதில் அன்ஷூ மாலிக் தொடக்கத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்ட போதிலும் அனுபவம் வாய்ந்த மரோலிசை அடக்க முடியவில்லை. முடிவில் அன்ஷூ மாலிக் 1-4 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com