

ரியாத்,
18 அணிகள் இடையிலான சவுதி புரோ லீக் கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் நடந்து வருகிறது. இதில் தைப் நகரில் நடந்த லீக் ஆட்டத்தில் அல் நாசர் அணி 4-2 என்ற கோல் கணக்கில் அல் ஹபாப் அணியை வீழ்த்தியது. இந்த தொடரில் அல் நாசர் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 75-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த போட்டி தொடரில் ரொனால்டோ அடித்த 100-வது கோல் இதுவாகும். அத்துடன் இந்த சீசனில் 26-வது கோலாக பதிவானது. இதன் மூலம் ஒட்டு மொத்தத்தில் (கிளப் மற்றும் சர்வதேச போட்டி களை சேர்த்து) ரொனால்டோவின் கோல் எண் ணிக்கை 971 ஆக அதிகரித்துள்ளது.
போர்ச்சுகல் அணியின் கேப்டனும், உலகின் முன்னணி வீரர்களில் ஒருவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2022-ம் ஆண்டு முதல் சவுதி புரோ லீக் போட்டியில் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் 32-வது ஆட் டத்தில் ஆடிய அல் நாசர் அணி 27 வெற்றி, ஒரு டிரா, 4 தோல்வியுடன் 82 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.