ஆசிய பாரா விளையாட்டு: வில்வித்தையில் உலக சாதனையை சமன் செய்த ஷீத்தல் தேவி

720-க்கு 704 புள்ளிகளைப் பெற்று அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஆசிய பாரா விளையாட்டு: வில்வித்தையில் உலக சாதனையை சமன் செய்த ஷீத்தல் தேவி
Published on: 

ஐச்சி-நகோயா,

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026-ம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி உலக சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார். மகளிருக்கான காம்பவுண்ட் வில்வித்தை தகுதிச் சுற்றில் 720-க்கு 704 புள்ளிகளைப் பெற்று அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

704 புள்ளிகள் பெற்று முதலிடம்

ஜப்பானின் ஒகசாகி சுவோ சோகோ பூங்காவில் நடைபெற்ற மகளிருக்கான காம்பவுண்ட் வில்வித்தை தகுதி சுற்றில் ஷீத்தல் தேவி தொடக்கம் முதலே துல்லியமாக இலக்கைத் தாக்கினார். 72 அம்புகளை எய்த அவர், இரு பாதிகளிலும் தலா 352 புள்ளிகளைப் பெற்றார். மொத்தம் 32 முறை மிகத் துல்லியமான மையப்புள்ளியையும், 25 முறை 10 புள்ளிகளையும் பெற்ற அவர், தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தார்.

உலக சாதனை சமன்

துருக்கி வீராங்கனை ஓஸ்னுர் கியூர் கிர்டி, 2024-ம் ஆண்டு பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் 704 புள்ளிகள் பெற்று உலகச் சாதனை படைத்திருந்தார். தற்போது அதே 704 புள்ளிகளைப் பெற்ற ஷீத்தல் தேவி, அந்த சாதனையைச் சமன் செய்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com