இந்திய ஈட்டி எறிதல் வீரர் ஷிவ்பால் சிங் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

இந்திய ஈட்டி எறிதல் வீரர் ஷிவ்பால் சிங் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார்.
இந்திய ஈட்டி எறிதல் வீரர் ஷிவ்பால் சிங் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
Published on

போட்செப்ஸ்ட்ரூம்,

தென்ஆப்பிரிக்காவில் நேற்று முன்தினம் நடந்த தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் 24 வயதான ஷிவ்பால் சிங் தனது 5-வது முயற்சியில் 85.47 மீட்டர் தூரம் வீசி ஒலிம்பிக் போட்டிக்கு முதல்முறையாக தகுதி பெற்றார். ஈட்டி எறிதலில், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற 85 மீட்டர் தூரம் வீச வேண்டும் என்பது இலக்காகும்.

ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற 2-வது இந்தியர் ஷிவ்பால் சிங் ஆவார்.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நடந்த போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com