பளுதூக்குதலில் வெள்ளி பதக்கம்... கபடியில் ஹாட்ரிக் வெற்றி: இந்தியா அசத்தல்!

ஆசிய விளையாட்டு போட்டியில் மீராபாய் சானு தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளார்.
பளுதூக்குதலில் வெள்ளி பதக்கம்... கபடியில் ஹாட்ரிக் வெற்றி: இந்தியா அசத்தல்!
Published on

நகோயா,

பளுதூக்குதலில் இந்தியாவுக்கு வெள்ளி வென்று தந்துள்ளார் மீராபாய் சானு.

ஆசிய விளையாட்டு

ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

வெள்ளிப் பதக்கம்

இந்த நிலையில், பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டில் முதல் பதக்கம்

இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் மீராபாய் சானு தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளார். ஆசிய விளையாட்டில் இதற்கு முன்பு பதக்கம் வெல்லாத மீராபாய் சானு, தற்போது வெள்ளிப் பதக்கம் வென்று தனது பதக்கக் கணக்கை தொடங்கியுள்ளார்.

கபடி

கபடியில் 'குரூப் ஏ' பிரிவு ஆட்டத்தில் வங்காளதேசத்தை 48-25 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய ஆண்கள் அணி, தனது தோல்வியற்ற பயணத்தைத் தொடர்கிறது. குரூப் சுற்றில் இந்திய அணி பெறும் தொடர்ச்சியான 3-வது வெற்றி இதுவாகும். தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) சைனீஸ் தைபே அணியை எதிர்கொள்கிறது.

இந்தியா 8-வது இடம்

இந்த வெள்ளி பதக்கத்தின் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 7 பதக்கங்கள், கிரிக்கெட்டில் 1 தங்கம் , சாப்ட் டென்னிஸில் வெண்கலம் மற்றும் கலப்பு தற்காப்புக் கலையில் (MMA) சுசிகா தரியால் வென்ற வெண்கலம் உட்பட இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com