

புதுடெல்லி,
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து, சமீபத்திய உலக பேட்மிண்டன் தரவரிசையில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் கேர்ஸ்பெல்ட்டை எதிர்கொண்டார். இதில் சிந்து 21-12, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த ஆண்டில் சிந்து வென்ற 2-வது பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு ஜப்பான் ஓபன் தொடரிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
ஹைலோ ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் சிந்துவுக்கு 9,200 தரவரிசைப் புள்ளிகள் கிடைத்தன. இதன் மூலம் சமீபத்திய சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பின் (BWF) உலகத் தரவரிசையில் அவர் இரண்டு இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.