சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை ரிகோவுடன் மோதினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை ரிகோ குன்ஜியுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-9, 21-12 என்ற செட் கணக்கில் ரிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 37 நிமிடங்களுக்கு நீடித்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com