

செயின்ட் லூயிஸ்,
கிராண்ட் செஸ் தொடரின் அங்கமான சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி (5-வது கட்ட போட்டி) அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 9-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரியை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 37-வது நகர்த்தலில் டிரா செய்தார்.
கடைசி சுற்று முடிவில் வெஸ்லி சோ, பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 5% புள்ளிகளுடன் சம நிலை வகித்ததால், சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்க டைபிரேக்கர் (ஆர்மகேட்டான்) முறை கடைபிடிக்கப்பட்டது. இதன் இரண்டு ரேபிட் ஆட்டமும் 'டிரா'வில் முடிந்ததால் மறுபடி யும் சமநிலை நீடித்தது. இதனால் 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும், வெஸ்லி சோ கருப்பு நிற காய்களுடனும் விளையாடினார்கள். இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடுபவருக்கு 5 நிமிடமும், கருப்பு நிற காய்களுடன் ஆடுபவருக்கு 4 நிமிடமும் வழங்கப்படும். ஆட்டம் டிராவில் முடிந்தால் கருப்பு நிற காய்களு டன் ஆடுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இந்த விதிமுறையின் படி நடந்த கடைசி ஆட்டமும் டிராவில் முடிந்ததால் (1.5-1.5 புள்ளி) கருப்புநிற காய்களுடன் ஆடிய வெஸ்லி சோ சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். பிரக்ஞானந்தா 2-வது இடம் பெற்றார்.