சின்க்பீல்டு கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா ‘டிரா’

அமெரிக்க வீரர் லெவோன் அரோனியனை எதிர்கொண்டார்.
சின்க்பீல்டு கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா ‘டிரா’
Published on

செயின்ட் லூயிஸ்,

கிராண்ட் செஸ் தொடரின் அங்கமான சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 10 வீரர்கள் பங்கேற்று மோதுகிறார்கள். இதில் 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் லெவோன் அரோனியனை எதிர்கொண்டார்.

வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலில் டிரா கண்டார். இதேபோல் மேஷிம் வாஷிர் (பிரான்ஸ்)-வெஸ்லி சோ (அமெரிக்கா), சாமுவேல் செவியன் (அமெரிக்கா)-வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), ஜவோகிர் சிந் தாரோவ் (உஸ்பெகிஸ்தான்)-பேபியானோ கருணா (அமெரிக்கா) ஆகியோர் இடையிலான ஆட் டமும் டிராவில் முடிந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com