சின்க்பீல்டு கோப்பை செஸ்: 5-வது சுற்றில் பிரக்ஞானந்தா ‘டிரா’

பிரக்ஞானந்தா 3 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்.
சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டியின் 5-வது சுற்றில் பிரக்ஞானந்தா டிரா கண்டார்.
Published on

செயின்ட் லூயிஸ்,

சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டியின் 5-வது சுற்றில் பிரக்ஞானந்தா டிரா கண்டார்.

சின்க்பீல்டு கோப்பை

கிராண்ட் செஸ் தொடரின் அங்கமான சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 10 வீரர்கள் பங்கேற்று மோதி வருகிறார்கள். இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 5-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞா னந்தா, அமெரிக்க வீரர் வெஸ்லி சோவை எதிர்கொண்டார்.

கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 26-வது நகர்த்தலில் டிரா கண்டார். இதேபோல் ஜவோகிர் சிந்தாரோவ் (உஸ்பெகிஸ்தான்)-சாமுவேல் செவியன் (அமெரிக்கா). ஜோர்டான் வான் பாரஸ்ட் (நெதர்லாந்து) -மேக்ஷிம் வாஷிர் (பிரான்ஸ்) இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது.

2-வது இடம்

5-வது சுற்று முடிவில் வெஸ்லி சோ 3% புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பேபியானோ கருணா, மேக்ஸிம் வாஷிர், வின்சென்ட் கீமர். பிரக்ஞானந்தா தலா 3 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com