சின்க்பீல்டு கோப்பை செஸ்: 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி

பிரக்ஞானந்தா 51-வது நகர்த்தலில் தோல்வி அடைந்தார்.
சின்க்பீல்டு கோப்பை செஸ் 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்துள்ளார்.
Published on

செயின்ட் லூயிஸ்,

சின்க்பீல்டு கோப்பை செஸ் 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்துள்ளார்.

பிரக்ஞானந்தா - வின்சென்ட்

கிராண்ட் செஸ் தொடரின் அங்கமான சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 10 வீரர்கள் பங்கேற்று மோதி வருகின்றனர். இதன் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை எதிர்கொண்டார்.

கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 51-வது நகர்த்தலில் தோல்வி அடைந்தார்.

4-வது இடம்

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் வெஸ்லி சோ 37-வது காய்நகர்த்தலில் சக நாட்டு வீரர் பேபியானோ கருணாவுக்கு அதிர்ச்சி அளித்தார். 3-வது சுற்று முடிவில் வெஸ்லி சோ 2 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மேக்சிம் வாஷியர், லெவோன் அரோனியன் தலா 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கின்றனர். பிரக்ஞானந்தா (1% புள்ளி) 4-வது இடத்தை இணைந்து வகிக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com