சின்க்பீல்டு கோப்பை செஸ்: சிந்தாரோவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பிரக்ஞானந்தா

முதல் சுற்றில் டிரா செய்த பிரக்ஞானந்தா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி தொடரின் 2-வது சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றிபெற்றுள்ளார்.
Published on

செயின்ட் லூயிஸ்,

சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி தொடரின் 2-வது சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றிபெற்றுள்ளார்.

2-வது சுற்று ஆட்டம்

கிராண்ட் செஸ் தொடரின் அங்கமான சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 10 வீரர்கள் பங்கேற்று மோதி வருகின்றனர். இதன் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவை சந்தித்தார்.

முதல் வெற்றி

வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 95-வது நகர்த்தலில் சிந்தாரோவை சாய்த் தார். முதல் சுற்றில் டிரா செய்த பிரக்ஞானந்தா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com